ETV Bharat / state

நெற்பயிரை மிதித்து சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் செல்லும் அவலநிலை

புதுக்கோட்டை: பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்லும் பாதை இல்லாததால், அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்லை மிதித்து இறந்தவர்களின் உடலைக் கொண்டுசெல்வது வேதனையளிப்பதாகக் கார்காமலம் கிராம மக்கள் கூறுகின்றனர்.

lack of road facilities, சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லை
சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லை
author img

By

Published : Jan 17, 2020, 12:33 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், மணலூர் கிராம ஊரட்சிக்குட்பட்ட கார்காமலம் கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் குடும்பங்களாக வசித்துவருகின்றனர். கார்காமலம் கிராமத்தில், வீரன் என்பவரின் மனைவி வெள்ளாச்சி என்ற மூதாட்டி இறந்ததையடுத்து, சுடுகாட்டிற்குச் செல்ல சாலையில்லாமல் விளைந்த நெற்பயிரை மிதித்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கிராமத்தினர் வேதனையுடன் கூறினர்.

பல ஆண்டுகளாக நீடித்துவரும் இப்பிரச்னை குறித்து பலமுறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்று அம்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

எனவே சம்பத்தப்பட்ட அலுவலர்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டு சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி எற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:Body:*பல ஆண்டு காலமாக சுடுகாட்டிற்கு செல்லும் பாதை இல்லாததால் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை மிதித்து சுடுகாட்டிற்கு செல்லும் அவலநிலை*

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா மணலூர் கிராம ஊரட்சிக்கு உட்பட்ட கார்காமலம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கார்காமலம் கிராமம் ஆதிதிரவிட மக்களை சார்ந்த வீரன் என்பவரின் மனைவி வெள்ளாச்சி என்ற மூதாட்டி இறந்ததை அடுத்து சுடுகாட்பிற்கு செல்ல சாலை இல்லாமல் விளைந்த நெற்பயிரை மிதித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல ஆண்டுகாலமாக இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர் ஆகவே சம்பத்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு அம்மக்களுக்கு சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி எற்ப்படுத்தி கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்களின் மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.