திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள திமுகவினர், அந்தந்த ஊர்களில் அவருக்கு சிலை எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கு திமுகவினர் முடிவு செய்தனர். இந்நிலையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்கள் நடைபெற்றன.
இது முடிந்தவுடன் அலுவலகத்தின் உள்ளேயே திமுக எம்எல்ஏக்கள் ரகுபதி, பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆகியோரின் தலைமையில், கருணாநிதி சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து மத முறைப்படி தேங்காய் உடைத்து, பால் ஊற்றி, சூடம் ஏற்றி திமுகவினர் வழிபட்டனர்.
மதசார்பற்ற கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் திமுகவின் மாவட்ட கட்சி அலுவலகத்தில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் வழிபாட்டு முறையில் பூமி பூஜை நடத்தியது பொதுமக்கள் மட்டுமின்றி அக்கட்சியினர் இடத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பொண்ணுங்கள கேலி செய்வீங்களா' - விடுதிக்குள் நுழைந்து அடித்து நொறுக்கிய 20 பேர்!