ETV Bharat / state

'பெரியார் சிலையை உடைத்தவர்களை விரைவில் கைது செய்க..!' - தொண்டர்கள் போராட்டம்

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் பெரியார் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெரியார் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடைக்கப்பட்ட பெரியார் சிலை
author img

By

Published : Apr 8, 2019, 3:21 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை, கடந்த 18 .8. 1998 அன்று திராவிட கழகம் தலைவர் கி வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் சிலையின் தலையை உடைத்துள்ளனர். இச்சம்பவம், அறந்தாங்கி மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து பெரியார் தொண்டர்கள், சிலை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சூரிய பிரபு, உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த பிறகே தொண்டர்கள் கோஷமிட்டபடியே அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன் கூறுகையில், தேர்தல் சமயத்தில் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை. இதுபோன்ற செயல்களால் தமிழக மக்கள் தக்க தண்டனையை தவறு செய்தவருக்கு கொடுப்பார்கள். நாங்கள் உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை. பெரியார் இந்த தமிழ் சமூகத்திற்காக மக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். அப்படிப்பட்டவரின் உருவச் சிலையை உடைக்க விரோதிகள் உட்கார்ந்து திட்டமிட்டு செய்திருக்கின்றனர். சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், என்றார்.

Intro:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது இதனால் கட்சி தொண்டர்கள் கொந்தளித்து சிலை அருகிலேயே அமர்ந்து சிலை உடைத்து அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தர்ணாவில் இருந்து வருகின்றனர்..

Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பெரியார் நிற்பது போன்ற முழு உருவச்சிலை 18 .8. 1998 அன்று திக தலைவர் கி வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இச்சிலையை நேற்றிரவு மர்ம நபர்கள் சிலையின் தலையை உடைத்துள்ளனர்.இதனால் அறந்தாங்கி மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு பகுதியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆலங்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் அவர்கள் தெரிவித்ததாவது,
இன்று காலையில் தகவலைக் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது தலையை தனியாக உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்தவுடன் கண் கலங்கிவிட்டது பெரியார் இந்த நாட்டில் தாய் எவ்வளவோ செய்திருக்கிறார் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி என்று பல்வேறு துறைகளில் அனைவரும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரிய தான் காரணம் ஆனால் அப்படிப்பட்டவரின் உருவத்தை அவமதிப்பது போல இச்செயலை விரோதிகள் செய்திருக்கின்றனர் இது மிகப்பெரிய கண்டனத்திற்குரியது. ஆண்டு இதே போல ஆலங்குடியில் உள்ள சிலையை ஒருவர் உடைத்தெரிந்தார் அப்போதே நாங்கள் வழக்கு பதிவு செய்து இருந்தோம் சம்பந்தப்பட்டவரை கண்டறிந்து தக்க தண்டனை அளித்து இருந்தால் இந்த ஆண்டு இதே போல் ஒரு சம்பவம் நடந்திருக்காது தற்போது தேசப்பற்று என்பது காவல்துறையினரிடம் கூட இல்லை என்பதுதான் உண்மை இது திராவிட நாடு திராவிட மண்ணில் திராவிட காத்தவர் பெரியார் இனி எந்த தீய சக்தியாலும் இப்படி ஒரு செயலை செய்யக் கூடாது என்பது போல தண்டனையை இம்முறை காவல் நாய் கொடுக்க வேண்டும் குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரபோவதே இல்லை. இதுபோன்ற சூழல் தமிழகத்தில் எந்த பகுதியிலும் நடக்காமல் இருக்க அதனை பாதுகாக்க தமிழக அரசு ஆணை எடப்பாடி அரசுக்கு பொறுப்பு இருக்கிறது அதனை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து அறந்தாங்கி தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் உதய சண்முகம் அவர்கள் தெரிவித்ததாவது, இப்படிப்பட்ட செயல் செய்த வரை காவல்துறை இன்றைக்குள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறினார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தற்போதைய திமுக இளைஞரணி இலக்கிய செயலாளர் கவிதைப்பித்தன் அவர்கள் கூறியதாவது,

பெரியார் சிலை உடைக்கப்பட்டது தகவலை அறிந்து நெஞ்சம் பதறுகிறது இந்த செய்தியை தலைவர் வீரமணி அவர்களிடம் தெரிவித்தபோது அவர் பொறுமையாக பதிலளித்தார் என்னவென்றால் " சமூக விரோதிகளால் இதுபோன்று எத்தனை பெரியார் சிலைகளை உடைக்க முடியுமா உடற்கட்டும் அப்போது தான் தமிழனுக்கு சூடு சொரணை என்பது வரும் அதனால் இதுபோன்ற சிலைகளை அவர்களை அழைத்துக் கொண்டே இருக்கட்டும்" என்று கூறியதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் சமயத்தில் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை இதுபோன்ற செயல்களால் தமிழக மக்கள் தக்க தண்டனையை தவறு செய்தவருக்கு கொடுப்பார்கள். நாங்கள் உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை. அய்யா பெரியார் இந்த தமிழ் சமூகத்திற்காக மக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். அப்படிப்பட்டவரின் உருவச் சிலையை உடைக்க விரோதிகள் உட்கார்ந்து திட்டமிட்டு செய்திருக்கின்றனர்.
நான் நிதானமாக கேட்கிறேன் ஒருவன் மேடையிட்டு பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியபோது அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற செயல் நடந்திருக்குமா? கண்டிப்பாக நடந்திருக்காது ஆனால் தற்போது தொடர்ந்து இதுபோன்ற செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. திமுக திக தொண்டர்கள் அண்ணாவால் கலைஞரால் பெரியாரால் உருவாக்கப்பட்ட நாங்கள் ஒருபோதும் கோழையல்ல என்பதை நான் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மாபெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

அறந்தாங்கி பகுதி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இரண்டு தனிப்படைகள் அமைத்து இது தொடர்பாக குற்றவாளியை தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அறந்தாங்கி பகுதியில் வட்டாட்சியர் சூரிய பிரபு அவர்கள் எழுத்துப்பூர்வமாக விரைவில் நடவடிக்கை எடுத்து தருவதாக தொண்டர்களிடம் எழுதி கொடுத்த பிறகு தொண்டர்கள் கோஷமிட்டபடி அனைவரும் கலைந்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.