புதுக்கோட்டை:புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பரசன் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கை உருவாக்கி இளம்பெண் ஒருவரின் அனுமதியின்றி அவரது புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்து மார்பிங் செய்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த வழக்கில் அன்பரசன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன்,இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆப்களில் ஒன்றானது இன்ஸ்டாகிராம்.இதில் பயனாளர்கள் தங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் இந்த அப் தற்போது டிரெண்டிங்கில் உள்ள அப் என்பதாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய அப் அதனால் நாம் அதை கவனமாகக் கையாள வேண்டும்.
மேலும் அதில் நம் நேரத்தை செலவிடாமல் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுமாறு நீதிபதி அறிவுரை வழங்கினார்.மேலும் அதை லைக் போடுவதற்கும் வீடியோ பதிவிட மற்றும் சேர் செய்வதற்கு மட்டுமே அளவோடு பயன்படுத்தினால் ரொம்ப நல்லது. ”அளவுக்கு மீறி போனால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை அனைவரும் அறிவர். அதுபோல இந்த அப் மட்டுமின்றி எந்த அப் என்றாலும் அளவோடு பயன்படுத்துமாறு தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர் ஏற்கனவே சிறையில் இருக்கிறார் என்பது தெரியவந்தது."மனுதாரர் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை உருவாக்கி, இளம்பெண்ணின் அனுமதியின்றி அவருக்குத் தெரியாமல், அவரது புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து மார்ஃபிங் செய்து மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளார்.இளம்பெண் கண்டித்த பின்பும் மீண்டும் அச்செயலைச் செய்துள்ளார் என்பது கண்டிக்கத்தக்கது.
இந்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருக்கும் காலத்தைக் கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை சைபர் காவல் நிலையத்தில் ஆறு வாரங்களுக்குத் தினமும் காலை, மாலை என இருவேளைக் கையெழுத்திட வேண்டும்.மேலும் சிறையிலிருந்து வெளிவந்த இரண்டு நாட்களில் இனிமேல் இது போன்ற தவறு செய்ய மாட்டேன் என பிரமாண பத்திரத்தைப் புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த வழக்கில் தலைமறைவாகக் கூடாது மற்றும் சாட்சிகளை அழிக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:திமுக அரசைக் கண்டித்து ஜூன் 21இல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு