ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்; காவலர் உட்பட 11 பேரிடம் மரபனு சோதனை நடத்த அனுமதி! திடுக்கிடும் தகவல்கள் - புதுக்கோட்டை

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், தற்போது நீரின் பகுப்பாய்வு சோதனை வெளியாகியுள்ளது. அதில் 1 பெண், 2 ஆண்களின் மலம் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

The court has given permission to conduct DNA test on 11 people including the policeman in the vengaivayal case
வேங்கைவயல் விவகாரத்தில் காவலர் உட்பட 11 பேரிடம் மரபனு சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
author img

By

Published : Apr 21, 2023, 11:14 AM IST

புதுக்கோட்டை: இறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர், மேலும் மத்திய மண்டல ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கி விடப்பட்டிருந்த நிலையில் வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றியது.

இந்நிலையில் கடந்த 105 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை சிபிசிஐடி காவல்துறையினர் இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை செய்து உள்ளனர்.

இதனிடையே தமிழக அரசு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் இந்த வழக்கு சம்பந்தமாக ஒரு ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவு என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில் நாங்கள் கடந்த 105 தினங்களாக 147 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், அதில் சந்தேகத்திற்குரிய 11 நபர்களிடம் மரபணு பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புக் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சத்தியா உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் மேற்கண்ட 11 நபர்களிடம் பார்த்திபன் என்ற அதிகாரி தலைமையில் மரபணு பரிசோதனையைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்த வேங்கை வயல் பகுதியை சேர்ந்த 9 நபர்களிடமும், காவிரி நகர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவரிடமும் தற்பொழுது மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் ஆய்வகத்தில் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட வேங்கை வயல் குடிநீர் தொட்டியின் நீர் மாதிரியை ஆய்வு செய்ததில் அதில் ஒரு பெண், இரண்டு ஆண்களின் மலம் கலக்கப்பட்டிருப்பது உறுதியானது. மேலும் சிபிசிஐடி போலீசார் மரபனு பரிசோதனைக்கு உட்படுத்த உள்ள 11 பேரில் 2 பெண்கள், 1 காவலரும் உள்ளனர்.

தற்போது இந்த மரபணு சோதனை மூலம் நான்கு மாதங்களாக பல்வேறு கட்டங்களை கடந்து வந்த வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகார வழக்கானது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.