ETV Bharat / state

புதுக்கோட்டையில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன் 24) ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coroner infected 13 people in Pudukkottai

author img

By

Published : Jun 24, 2020, 10:18 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் இன்று (ஜூன் 24) மாவட்டத்தில் 13 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று உள்ளவர்கள் அனைவரும் ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து தீவிர கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதுவரை 101 பேர் கரோனா தொற்று பாதித்துள்ள நிலையில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் இருவர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.