கரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது 500யை தாண்டியுள்ளது.
நேற்று ( ஜூலை 10) மட்டும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது.
இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். 246 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 280 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க: பிளாஸ்மா தெரபி மூலமாக கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு உத்தரவு!