புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர், பாதாளசாக்கடை பிரச்னை சம்பந்தமாக புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா தலைமையில் நேற்று(மே.14) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் பிரச்னை, பாதாள சாக்கடை பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு அலுவலர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
கூட்டத்தில் எம்எல்ஏ கூறியதாவது:
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை பகுதிக்கு 20எம்.எல்.டி தண்ணீர் திறந்து விடப்பட்டு அதில் தோராயமாக 8.5 எம்.எல்.டி தண்ணீர் இலுப்பூர் அன்னவாசல் அந்த பகுதிகளுக்கு வந்தாலும் கூட புதுக்கோட்டைக்கு 12எம்.எல்.டி தண்ணீர் கிடைக்க வேண்டும் .
இந்த 12எம்.எல்.டி தண்ணீரில் புதுக்கோட்டைக்கு கடைசியாக கிடைத்தது 2.7 எம்.எல்.டி தண்ணீர் மட்டுமே. இடையில் மீதி உள்ள தண்ணீர் எல்லாம் என்னவாகிறது என்பது ஒரு புரியாத புதிராக இருக்கின்றது. அந்த 2.7 எம்.எல்.டி தண்ணீரும் ஒழுங்கான முறையில் சப்ளை செய்வதில்லை. நகராட்சியில் குடிநீர் சம்பந்தமான எந்த வேலையும் ஒழுங்காக கடந்த நாட்களில் நடைபெறவில்லை. இதனால்தான் புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்கு தண்ணீர் 10 நாட்களுக்கு ஒருமுறை வருகின்றது. இன்னும் மூன்று நாட்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
இதையும் படிங்க: கரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு