ETV Bharat / state

புதுக்கோட்டை மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சரியான முறையில் உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா என மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

author img

By

Published : Jul 25, 2020, 12:57 PM IST

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் அரசு மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தும் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்தும் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இதனை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் மருத்துவர்களுடன் அடிக்கடி ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதுடன், கரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தினம்தோறும் கரோனா நோயாளிகளிடம் தொலைபேசி மற்றும் காணொலிக்காட்சி வாயிலாக அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்கள்.

அந்த வகையில் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு இரவு உணவு 7.15 மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மூன்று வேலைகளிலும் சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி மூலம் ஆர்.ஓ அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி அம்மா குடிநீர் பாட்டில்கள் நோயாளிகள் இருக்கும் இருப்பிடத்திற்கே சென்று வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் நோயாளிகளுக்கு உரிய நேரத்திற்குள் உணவு வழங்கும் வகையில் போதுமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இம்மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் காபி, சிக்கன் சூப், பால், கடலைப் பருப்பு, சுண்டல், சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, காய்கறி பிரியாணி, நெய் மிளகுபொங்கல், வேக வைத்த பாசிப்பயறு, ரவா முந்திரிபொங்கல் போன்ற பல்வேறு வகையான சத்தான உணவுகள் தரமாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட உணவுகள் அனைத்தும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் மேற்பார்வையில் ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்யும் வகையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் மூலம் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.