புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மூன்று வயது மகன் ஆரிப் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இதனால் கோட்டைப்பட்டினம் அரசினர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக ஆரிப் கூட்டி செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் என்று அனுப்பிவிட்டனர். இருந்தபோதிலும் காய்ச்சல் சரியாகததால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று ஆரிப் இறந்துவிட்டதை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிறுவனின் தாய், மழைக்காலம் வந்துவிட்டதால் அவர்கள் இருக்கும் குடியிருப்பின் மோசமான சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது என்றார்.
மேலும் தண்ணீரில் பாசிகள் படர்ந்து அசுத்தமாகி வருகிறதாகவும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு தூங்ககூட முடிவதில்லை, சுகாதாரத் துறை அமைச்சரின் ஊரிலேயே இப்படி ஒரு நிலைமை என்றால் யாரிடம் போய் சொல்வதென்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.