ETV Bharat / state

இருதரப்பினரிடையே தொடரும் மோதல்: பொதுமக்கள் புகார்!

புதுக்கோட்டை: இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை
author img

By

Published : Mar 28, 2019, 5:23 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா சின்ன குரும்பன்பட்டி கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “பெரிய குரும்பன்பட்டி காயாம்பு அய்யனார் கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தபோதுஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள்மற்றொரு தரப்பைச்சேர்ந்தவர்களின்மாடுகளை அடக்கினர்.

இதனால் மாடுகளை அடக்கிய தரப்பினரின்வீடுகளை சூறையாடுதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில்மற்றொரு தரப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

மேலும், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஆண், பெண், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் தாக்கி ஊருக்குள் பெரிய கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர்.

இது தொடர்பாக இலுப்பூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தும் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். அதனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இருதரப்பினரிடயே ஏற்பட்ட கலவரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pudukottai

Intro:எந்த ஜாதியா இருந்தா என்ன நாங்களும் மனுஷங்கதானே...!
கதறும் கிராம மக்கள்..

Body:அன்றைய காலத்தில் தான் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று ஜாதி பாகுபாடு இருந்தது தாழ்த்தப்பட்டவர்களை அடிமையாக நடத்தினர் சுதந்திரத்தை பிறகு அரசியலமைப்பு சட்டம் வந்த பிறகு அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாது என்று நினைத்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றும் இக்கொடுமை தொடர்ந்து வருகிறது..

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா சின்னகுரும்பன் பட்டி கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு..
மேலும் அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தது என்னவென்றால் பெரிய குரும்பபட்டி காயாம்பு அய்யனார் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது இதில் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் உடைய மாடுகளை தங்கள் கிராமப் பகுதி இளைஞர்கள் அடக்கியதாகவும் இதனால் கோபம் அடைந்த உடன் ஜாதி வகுப்பைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களுடைய வீடுகளை சூறையாடிய சொத்துகளை சேதப்படுத்தியும் 20க்கும் மேற்பட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஆண் பெண் குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் தாக்கி ஊருக்குள் பெரிய ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி விட்டனர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக இலுப்பூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் அதனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதுதொடர்பாக அந்த கிராம மக்களிடம் கேட்டபோது,
" எந்த ஜாதியாக தான் இருந்தால் என்ன எல்லாரும் மனுஷங்கதானே எல்லாருக்கும் இருக்கும் உணர்வு தானே எங்களுக்கும் இருக்கு எல்லா பெண்களைப்போல தானே நாங்களும் இருக்கிறோம் ".இப்படி அநியாயம் செய்யலாமா? அந்த காலத்தில் தான் ஜாதியை வைத்து கொடுமைப் படுத்தினார்கள் அதேபோல காலம் முன்னேறினாலும் இந்த ஜாதிக்கொடுமை இருக்கிறது. நாங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் கோவிலுக்குள் விடுவதில்லை திருவிழாக்களில் கலந்து கொள்ள விடுவதில்லை அவர்கள் சாலையில் சென்றால் நாங்கள் எழுந்து நின்று கும்பிட்டு விழுகனுமாம், அப்படி செய்யலைன்னா கல் எடுத்துக்கிட்டு அடிக்கிறாங்க மண்டையை உடைக்கிறாங்க வாடி போடி னு மரியாதை இல்லாம பேசுறாங்க. கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறாங்க. ஊருக்குள் எந்த ஒரு நல்லது கெட்டது நிகழ்ச்சிகளுக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று கூறி அதற்கு அனுமதிப்பதே இல்லை. மேல்சாதியினரின் இடத்தில் எங்களது மாடு மேய்ந்தால் கூட மாட்டை அடித்து துன்புறுத்தி கட்டி வைத்து விடுகின்றனர் எங்களுக்கு தண்ணீர் விடுவதில்லை தண்ணீரை தொட்டால் தீட்டு ஆயிடுது இல்லை அதுக்கும் கட்டை எடுத்துக்கிட்டு அடிக்க வர்றாங்க. நாங்கள் எதை தொட்டாலும் தீட்டு ஆயிருமாம். கோவில் படியைக்கூட தொட்டு கும்பிட விடுவதில்லை. ஜல்லிக்கட்டில் மேல்சாதியினரின் மாடுகளை அடக்கியதால் ஊருக்குள் வந்து புகுந்து அனைவரையும் அடித்து உதைத்து வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் உடைத்து விட்டனர்.இப்படிப்பட்ட அநியாயத்தை கேட்க யாருமே இல்லை காவல்துறை கூட அமைதியாக இருக்கிறது.நாங்கள் முழு சுதந்திரத்துடன் வாழ எங்களுக்கு உரிமை இருக்கிறது காலா காலமாக நாங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் அடிமைப்பட்டு கிடக்கிறோம். எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் ஏனென்றால் எங்களது அடுத்த சந்ததியும் இதேபோல அடிமைப்பட்டு வாழ நாங்கள் விரும்பவில்லை என்று கண்ணீருடன் கதறி தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.