புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத் திட்டமும், 50 ஆண்டுகால கோரிக்கையும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமாகும்.
புதுக்கோட்டை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், செழிப்பான மாவட்டமாக மாற்றவும் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதன் பயனாக இத்திட்டத்திற்கு ரூ.14,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. பட்ஜெட்டில் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நிலமெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, இதற்கான பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிப்ரவரி 21ஆம் தேதி குன்னத்தூரில் வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக வருகை தந்து அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்க உள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: நீட்டுக்கே ஜூட் விட்டவர் முதலமைச்சர் பழனிசாமி - அமைச்சர் பெஞ்சமின்