ETV Bharat / state

அமமுகவில் சாதிவெறி தாங்க முடியவில்லை - புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் - அமமுக

புதுக்கோட்டை: அமமுக கட்சியில் சாதிவெறி தாங்கமுடியவில்லை எனக் கூறி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த குழ. சண்முகநாதன் அக்கட்சியிருந்து விலகி முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சண்முகநாதன்
author img

By

Published : Mar 18, 2019, 10:11 PM IST

செய்தியாளர்களை சந்தித்த குழ. சண்முகநாதன் கூறியதாவது, எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அதிமுகவில்தான் இருந்தேன். அம்மா இறந்த பிறகு கட்சியில் இருந்த பலருக்கும் வந்த குழப்பம் எனக்கும் வந்தது. இதையடுத்து அமமுகவில் இணைந்தேன்.

ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் பரபரப்பாக பணியாற்றியதால், கட்சியினர் பலரும் அறிமுகமானர்கள். இதனால் முதலில் ஒன்றியச் செயலாளராகவும், ஆறு மாதத்தில் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டேன். ஆனால் அங்குள்ள சாதிவெறி அரசியல், தொண்டர்களை மிகவும் வெறுப்படைய வைத்து விட்டது. டிடிவிக்குத் தெரியாமல் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் பரணி காரத்திகேயன் பல முடிவுகளை எடுக்கிறார். என்னை வடக்கு மாவட்டச் செயலாளர் என்று ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு பல தவறுகளைச் செய்கிறார். இதற்கு உறுதுணையாக இருப்பது அறந்தாங்கி நகரச் செயலாளர் சிவசண்முகம் ஆவார்.

இருவரும் சேர்ந்து கொண்டு மற்ற சமூகத்தினரை இழிவு படுத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலருக்கு பொறுப்புகளை பெயரளவுக்கு போட்டு கொடுத்து விட்டு, மற்ற கட்சிக்காரர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். இதில் நான் சார்ந்த முத்தரையர்கள் பெருமளவில் இருந்தாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

டிடிவி தினரகன் கட்சியில்இருக்கும் சாதி வெறி தாங்க முடியலப்பா. கட்சி மாறிய மாவட்ட செயளாலர்..
டிடிவி அணி என்று சொல்லப்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த குழ.சண்முகநாதன் யாருக்கும் சொல்லாமல் சென்னைக்குச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
அவரைச் சந்தித்துக் கேட்;டபோது.. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அதிமுகவில்தான் இருந்தேன். அம்மா இறந்த பிறகு கட்சியில் இருந்த பலருக்கும் வந்த குழப்பம் எனக்கும் வந்தது. ஒரு கட்டத்தில் அமமுகவில் இணைந்தேன்.
தொடக்கக் காலத்தில் இருந்து கட்சியில் பரபரப்பாக கட்சிப் பணி செய்து வந்து பலருக்கும் அறிமுகமாகியிருந்ததால் முதலில் ஒன்றியச் செயலாளராகவும் ஆறு மாதத்தில் மாவட்டச் செயலாளராகவும் ஆக்கப்பட்டேன்.
ஆனால் அங்குள்ள சாதிவெறி அரசியல் தொண்டர்களை மிகவும் வெறுப்படைய வைத்து விட்டது. டிடிவிக்குத் தெரியாமல் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பரணி காரத்திகேயன் பல முடிவுகளை எடுக்கிறார். என்னை வடக்கு மாவட்டச் செயலாளர் என்று ரப்பர் ஸ்டாம்பாகப் பயன் படுத்திக் கொண்டு பல தவறுகளைச் செய்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பது அறந்தாங்கி நகரச் செயலாளர் சிவசண்முகம். 
இருவரும் சேர்ந்து கொண்டு அவர்கள் சாதிக்காரர்களுக்கு மட்டும் கட்சியின் துணைப் பொறுப்புகளைப் போட்டுக் கொண்டு மற்ற சாதிக்காரர்களை இழிவு படுத்துகிறார்கள். தாழ்த்தப் பட்டவர்களில் ஒரு சிலருக்கு பொறுப்புகளை பெயரளவுக்கு போட்டு கொடுத்து விட்டு மற்ற கட்சிக்காரர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள்.
இதில் நான் சார்ந்த முத்தரையர்கள் பெருமளவில் இருந்தாலும் தொடர்ந்து அவமானப் படுத்தப் பட்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்திருக்கிறேன். விரைவில் அந்தக் கட்சியில் சாதிவெறிக் கொடுமையால் வெறுத்துப் போய் இருக்கும் பலரையும் பத்து பேருந்துகளில் அழைத்துக் கொண்டு போய் இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் கட்சியில் சேர்த்து விட இருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் தேதி கேட்டிருக்கிறேன் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.