ETV Bharat / state

'விவாதம் நடத்த நான் தயார்'.. அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு சாவல் விட்ட விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் 24 மணி நேரமும் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு சாவல் விட்ட விஜய்பாஸ்கர்

author img

By

Published : Aug 18, 2023, 3:53 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மதுரையில் நடக்கும் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், அதிமுகவின் மதுரை மாநாடு திருப்பு முனையாக அமையும். இந்த மாநாடு வெற்றி பெற உள்ளதை உளவுத்துறை மூலம் அறிந்த தமிழக அரசு, பயத்தில் அதே தேதியில் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடத்தை தவிர்த்து, தேர்தல் வாக்குறுதி சொல்வது போன்று நடந்து கொள்ள வேண்டும்.

திமுக நடத்தும் உண்ணாவிரதத்தை தாண்டி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லாத் தடைகளையும் தாண்டி அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். நீட் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கிறார். நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன் விவாதிக்க.

நல்ல நாளில்தான் நல்ல நிகழ்ச்சி நடைபெறும். ஆன்மீகத்தில் நாங்கள் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் வேண்டுமானால் அஷ்டமி நவமியில் வைத்துக் கொள்ளட்டும். அதிமுக ஒரு கடல் அலை. சின்னத்திரை கொண்டு கடல் அலையை தடுத்து நிறுத்த முடியாது. எல்லாத் தடைகளையும் தாண்டி மதுரைக்கு தொண்டர்கள் செல்வார்கள்.

புதுக்கோட்டை மன்னர், தனது அரண்மனையை ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 ஏக்கர் பரப்பளவில் ஒப்படைத்தார். அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இரண்டு ஏக்கர் அளிப்பதற்கு இந்த அரசுக்கு மனமில்லை. மன்னர் குடும்பத்தினர் விரும்புகின்ற இடத்தை இந்த அரசு வழங்க வேண்டும். அதிமுக எந்த காலத்திலும் யாருக்கும் பயந்தது கிடையாது. சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட கொடுமையின்போது சாட்சியாக இருந்த திருநாவுக்கரசர், தற்போது பிறழ் சாட்சியாக பதவிக்காக மாறி உள்ளது கண்டனத்திற்குரியது.

வரலாறு என்றைக்கும் மாறாது. காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறலாம், ஆனால் வரலாறு எப்போதும் மாறாது. நடந்தவைகளை ஒருபோதும் யாரும் மாற்ற முடியாது. சட்டமன்றத்தில் அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது கருப்பு தினமாக அதிமுக தொண்டர்கள் நினைத்து வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் அன்றைய தினம் நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் இருந்தார். இன்று திருநாவுக்கரசர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்” என கூறினார்.

இதையும் படிங்க : வாக்குச்சாவடி பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.