ETV Bharat / state

பேருந்தை ஓட்டும்போது நெஞ்சுவலி - இறக்கும் முன் பயணிகளின் உயிரைக் காத்த ஓட்டுநர் - ஓட்டுநர்

பொன்னமராவதியில் அரசுப்பேருந்து ஓட்டுநர் பணியின் போதே மாரடைப்பால் உயிரிழந்தார். இறக்கும் தருவாயில், பேருந்தை ஓரமாக நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

heart attack  Pudukkottai  bus driver heart attack  bus driver  bus driver saved people before die
இறப்பதற்கு முன்பு பயணிகளின் உயிர் காத்த ஓட்டுநர்!
author img

By

Published : Dec 7, 2022, 4:23 PM IST

Updated : Dec 7, 2022, 5:08 PM IST

புதுக்கோட்டை: பொன்னமராவதி பேருந்து பணிமனை கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர், சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த குமார். இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற குமார், சிங்கம்புணரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

அப்போது மேலைச்சிவபுரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் குமார், பேருந்தை ஓரமாக நிறுத்தி, பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேராத வகையில் காப்பாற்றிய பின், பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சகப் பயணிகளிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

பேருந்தை ஓட்டும்போது நெஞ்சுவலி - இறக்கும் முன் பயணிகளின் உயிர் காத்த ஓட்டுநர்

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று குமாரின் உடலைக் கைபற்றி, உடற்கூராய்வுக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்!

Last Updated : Dec 7, 2022, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.