ETV Bharat / state

பாஜக ஆர்ப்பாட்டம்; தேங்காய்களை போலீசார் மறைத்து வைத்ததால் வாக்குவாதம்

புதுக்கோட்டையில் தென்னை விவசாயிகளை பாதுகாக்கக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டு வரப்பட்டிருந்த ஆயிரம் தேங்காய்களை போலீசார் மறைத்து வைத்ததால் பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தென்னை விவசாயிகளை பாதுகாக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்; தேங்காய்களை போலீசார் மறைத்து வைத்ததால் வாக்குவாதம்

author img

By

Published : Jan 5, 2023, 6:08 PM IST

தென்னை விவசாயிகளை பாதுகாக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்; தேங்காய்களை போலீசார் மறைத்து வைத்ததால் வாக்குவாதம்

புதுக்கோட்டை: பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில் தென்னை விவசாயிகளை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்காக பாஜக சார்பில் ஆயிரம் தேங்காய்கள் டாட்டா ஏஸ் என்னும் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்துக்கு தயாரான பாஜகவினர் ஆயிரம் தேங்காய்களும், வண்டியுடன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பாஜகவினர் விசாரித்த போது, தங்களுக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தேகம் அடைந்த பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறைத்து வைக்கப்பட்ட ஆயிரம் தேங்காய்கள் மற்றும் வாகனத்தை காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில் பாஜகவினர், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை ஸ்டிக்கரை தேங்காயில் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்பனைக்கு வைக்க வேண்டும் எனவும்; பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் பயன்படுத்தப்படும் பாமாயிலை தவிர்த்து விட்டு, தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

இதையும் படிங்க: பணம் வைத்து சூதாட்டம்: அதிமுக முன்னாள் செயலாளர் உட்பட 11 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.