ETV Bharat / state

தமிழர் அடையாளத்துக்கு எதிரான கட்சி பாஜக -ப.சிதம்பரம் தாக்கு! - ramanadhapuram congress candidate

புதுக்கோட்டை: பாஜக மீண்டும், ஆட்சிக்கு வந்தால், தமிழர் அடையாளங்கள் அழிந்துவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தமிழர் அடையாளத்துக்கு எதிரான கட்சி பாஜக -ப.சிதம்பரம் தாக்கு!
author img

By

Published : Apr 12, 2019, 12:51 PM IST

புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் காலம் காலமாக காத்துவந்த குணங்கள் கெட்டுப் போய்விடும். சுயமரியாதை, முற்போக்கு கொள்கை, எம்மதமும் சம்மதம் உள்ளிட்ட தமிழர் அடையாளங்களுக்கு எதிரான கட்சி பாஜக. பாஜக போன்று செய்யமுடியாத அறிக்கைகளை காங்கிரஸ் சொல்லவில்லை. செய்ய முடிந்தவற்றைத்தான் காங்கிரஸ் சொல்லும்” என்றார்.

Intro:இந்த மண்ணுக்கு உதவாத கட்சி பாஜக கட்சி,..
விஷ நஞ்சானது இந்த பாஜக கட்சி அதனால் மக்கள் அதனை எதிர்க்க வேண்டும் புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் பேச்சு..

Body:நம் நாட்டில் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நபர் இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் வந்து ஏதேனும் மக்களை சந்தித்து இருக்கிறாரா இல்லை ஆட்சியில் இருக்கிறேன் என்று பெயர் மட்டும்தான் என்பது ஆனால் எந்தவித பயனும் இல்லை. பாஜக கட்சி தொடர்ந்து மக்களுக்கு கஷ்டத்தை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்காக பாடுபட்ட மனிதர்கள் வாழ்ந்த பூமி நம் தமிழ்நாடு அதையெல்லாம் மறந்து நம்மிடம் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தி அதாவது இந்தித் திணிப்பை நம்மில் விதைக்கப்படுகிறது ஆட்சி பாஜக ஆட்சி. மோடியின் ஆட்சி வெற்று காகிதம் போல எப்படி என்றால் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவருக்கும் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் அல்லவா அதுபோல தான். நாடு நன்மை பெற வேண்டும் என்றால் மக்களுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கு பாஜகவை மக்கள் எதிர்க்கவேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் நீட் தேர்வு பண மோசடி என பல்வேறு துரோகத்தை நம் நாட்டு மக்களுக்கு செய்தவர் மோடி. ஒன்றுக்கும் உதவாத கட்சி பாஜக விஷம் நிரம்பியது பாஜக. மொத்தத்தில் இந்த மண்ணிற்கு உதவாத ஆட்சிதான் பாஜக. காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன நல்ல திட்டங்கள் செய்யப்பட்டது இதனால் மக்கள் அனைவருக்கும் தெரியும் அது நிச்சயம் மக்கள் இந்த முறையும் மோடியிடம் ஏமாறாமல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.