இதுகுறித்து இளைஞர்கள் எடிசன் மற்றும் மதன் கூறியதாவது,
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் தற்போது அரசியலை திட்டித் தீர்த்து வருவதால் ஒரு பயனும் ஏற்பட போவதில்லை. அதற்கு பதிலாக ஓட்டு போடுவதற்கு முன்னால் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை நட்டுவையுங்கள். அந்த மரம் கண்டிப்பாக ஐந்து வருடங்கள் கழித்து நன்மை தரும்.
புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கடும் புயலால் மரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இயற்கை அழிவு நிலையில் உள்ளது. இதனால் மரங்களை நட வேண்டும். தனி ஒரு நபருக்கு 64 மரங்கள் சுவாசிக்க தேவைப்படுகிறது. ஆனால், வெறும் 11 மரங்கள் மட்டுமே உள்ளது.
ஓட்டு போடுவதற்கு முன் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு அத்துடன் செல்ஃபி எடுத்து கமெண்ட் செய்யுமாறு வீடியோ பதிவு ஒன்றை வெளிட்டோம். தற்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஊர்களிலிருந்தும் இளைஞர்கள் அதை செய்து வருகிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோல் இந்தியாவில் அனைவரும் செய்தால் நிச்சயம் இயற்கை புதுப்பிக்கப்படும் என்றனர்.
இவர்களுக்கு இந்த யோசனை விளையாடிக்கொண்டிருக்கும் போது சட்டென்று வந்ததது எனவும் தெரிவித்தனர்.