ETV Bharat / state

'கர்நாடகாவில் மழை பெய்வதே எடப்பாடி ராசியால் தான்' - திகில் கிளப்பிய அமைச்சர் விஜயபாஸ்கர் !

புதுக்கோட்டை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால் தான் கர்நாடகாவில் மழைப் பெய்து, காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

minister vijayabaskar
author img

By

Published : Sep 23, 2019, 11:37 AM IST

"டெங்கு பரவாமல் தடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகள்"- அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடியில் அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

"தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ராசியால்தான் கர்நாடகாவில் மழை பெய்கிறது. காவிரியில் தண்ணீர் புரண்டு வருகிறது. மேட்டூர் திறந்த சில நாட்களிலேயே கடைமடை வரை தண்ணீர் வந்து சேர்ந்தது. ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் மழையே வராது என்பது யாவரும் அறிந்ததே" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் பயணம் என்பது ஆர்ப்பரித்து எழும் அலையில் செலுத்தும் கப்பலை போன்றது என்றும், கடலில் செல்லும்போது சூறாவளியடித்தலோ, திமிங்கலம் வந்தாலோ கப்பல் லேசாக ஆடும். ஆனால், அதிமுக எனும் கப்பல் புயலே வந்தாலும் கவிழாது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

கப்பல் லேசாக ஆடுகிறதே என எண்ணி கப்பலில் இருந்து குதித்தவர்களின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் கரை ஏறியதாக வரலாறு இல்லை என அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரனின் அமமுக குறித்து அமைச்சர் மறைமுகமாக சாடினார்.

இதையும் பார்க்க: "டெங்கு பரவாமல் தடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகள்"- அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

Intro:Body:தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ராசியால்தான் கர்நாடகாவில் மழை பெய்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது,

அரசியல் பயணம் என்பது ஆர்ப்பரித்து எழும் அலையில் செலுத்தும் கப்பலை போன்றது. கடலில் செல்லும்போது சூறாவளியடிக்கும்போதோ, திமிங்கலம் வந்தாலோ கப்பல் லேசாக ஆடும். எனிலும், அதிமுக எனும் கப்பல் புயலே வந்தாலும் கவிழாது. ஆனால், கப்பல் லேசாக ஆடுகிறதே என எண்ணி கப்பலில் இருந்து குதித்தவர்கள் (டிடிவி.தினகரன் பக்கம்) என்னாச்சு?.
அவர்கள் கரை ஏறியதாக வரலாறு இல்லை. இது இவ்வாறு இருக்க, இன்னொரு ஆள் நான் கப்பலுக்கு முன்னாடி கொண்டு போய் இறக்கி விடுகிறேன் என கூறி படகில் சிலரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். இறுதியாக படகை ஓட்டியவர் கரையேறி விட்டார். ஆனால், அந்த படகில் பயணித்தவர்களின் நிலை என்ன ஆச்சு என்று தெரியவில்லை என அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதியின் சகோதரரும் அண்மையில் திமுகவில் இணைந்தவருமான கார்த்திகேயனை படகோட்டியாக விமர்சித்தார்

திமுகவில் இணைந்த எம்எல்ஏ வின் சகோதரர் கார்த்திகேயனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவிடம் பலமுறை ஐந்து அமைச்சர்களோடு கோரிக்கை மனு அளித்தும்-அவரை அம்மா சேர்க்கவே இல்லை

மாவட்டத்திலேயே அம்மாவின் தரிசனம் காட்டாமல் ஒருவர் இருக்கிறார் என்றால் அது மணமேல்குடி கார்த்திகேயன் மட்டுமே அவரைப் பற்றி அதிமுகவிற்கு கவலையில்லை

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ராசியால்தான் கர்நாடகாவில் மழை பெய்கிறது. காவிரியில் தண்ணீர் புரண்டு வருகிறது. மேட்டூர் திறந்த சில நாட்களிலேயே கடைமடை வரை தண்ணீர் வந்து சேர்ந்தது.ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மழையே வராது என்பது யாவரும் அறிந்ததே என்றும் பேசினார். இந்த பொதுக் கூட்டத்தில் அறந்தாங்கி மணமேல்குடி ஆவுடையார் கோயில் ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.