ETV Bharat / state

வங்கியில் 305 சவரன் தங்க நகைகள் கையாடல் - 4 ஊழியர்கள் கைது

புதுக்கோட்டை: தனியார் நிதி நிறுவனத்தில் 305 பவுன் நகைகளை கையாடல் செய்த ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author img

By

Published : Apr 24, 2021, 12:23 PM IST

4  ஊழியர்கள் கைது
4 ஊழியர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில் வங்கியில் வருடாந்திர தணிக்கையின் போது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 305 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த வங்கியின் மண்டல மேலாளர் ராஜேஷ் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், அதே வங்கியில் மேலாளராக பணிபுரியும் உமா சங்கர், முத்துக்குமார், சோலை மணி ஆகியோர் நகைகளைத் திருடியது தெரியவந்தது. உடனே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், மேல ராஜ வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்து இருப்பதாகவும், இதற்கு மேலாளர் மாரிமுத்துவும் உடந்தை என கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் தங்க நகைகள் கையாடல் செய்த நான்கு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கையாடல் செய்த 305 சவரன் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.