ETV Bharat / state

கர்ப்பிணியை கீழே தள்ளிய வங்கி துணை மேலாளர்! - pregnant woman

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே வங்கிக் கணக்கு தொடங்க சென்ற நிறைமாத கர்ப்பிணியை வங்கியின் துணை மேலாளர் கீழே தள்ளியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கர்ப்பிணியை கீழே தள்ளி வங்கி துணை மேலாளர்!

author img

By

Published : Jan 9, 2021, 5:29 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கறம்பக்குடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டுவருகிறது. இங்கு கரம்பக்குடி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மனைவி காளீஸ்வரி என்பவர் கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்காக வங்கிக் கணக்கு தொடங்க சென்றுள்ளார்.

கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தினந்தோறும் வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக சென்ற காளீஸ்வரியை வங்கி அலுவலர்கள் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று(ஜன.9) மீண்டும் வங்கிக்கு சென்ற காளீஸ்வரி, தான் நிறைமாத கர்ப்பிணி என்றும் தன்னால் அலைய முடியவில்லை எனவே விரைந்து வங்கி கணக்கு தொடங்கி தருமாறு வங்கியின் துணை மேலாளர் இளங்கோவனிடம் கூறியதற்கு, திங்கள்கிழமை வருமாறு கூறியுள்ளனர்.

கர்ப்பிணியை கீழே தள்ளி வங்கி துணை மேலாளர்!

தொடர் அலைக்கழிப்பால் விரக்தியடைந்த அவரது கணவர் பாஸ்கரன் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வங்கி துணை மேலாளர் காளீஸ்வரியின் கணவருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளியதாகவும், இதை தடுக்க சென்ற நிறைமாத கர்ப்பிணியான காளீஸ்வரியயும் கீழே பிடித்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கரம்பக்குடி காவல் நிலையத்தில், காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.