ETV Bharat / state

அறந்தாங்கி சிறுமி கொலை வழக்கு - கைதான ராஜா தப்பியோட்டம் - காவல்துறையினர் வலைவீச்சு

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜா தப்பியோடியுள்ளார்.

raja
raja
author img

By

Published : Jul 16, 2020, 10:57 AM IST

Updated : Jul 16, 2020, 12:59 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். பக்கத்து வீட்டில் பூக்கடைக்காரர் ராஜா (26) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து கண்மாயில் உள்ள புதரில் வீசியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் பூக்கடைக்காரர் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், இன்று காலை குற்றவாளி ராஜாவை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு காவலர்கள் கோகுல், குமார், முருகையன் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

அப்போது கையில் மாட்டியிருந்த விலங்கை உருவிக்கொண்டு குற்றவாளி ராஜா தப்பியோடியுள்ளார். தப்பியோடிய ராஜாவை 6 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெளியானது ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் - 92.2 விழுக்காடு தேர்ச்சி

Last Updated : Jul 16, 2020, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.