புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகே ஊராட்சி கட்டடம் கட்டுவதற்காக ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது அம்மன் சிலை மற்றும் சிலை வைக்கும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு விரைந்த சூரிய பிரபுவும் அந்த சிலைகளை கைப்பற்றி அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு கூறுகையில், இந்த சிலை எந்த ஆண்டைச் சேர்ந்தது என அதனை ஆராய்ச்சி செய்த பிறகே தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.