ETV Bharat / state

புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம் - City Council President Tilakavathy Senthil

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக வார்டுகளை புறக்கணித்து திமுக வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதாக, அதிமுக கவுன்சிலர் கூறியதால் திமுக கவுன்சிலர், அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் அதிமுக திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

author img

By

Published : Dec 30, 2022, 11:02 PM IST

புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் அதிமுக திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டு அரங்கில் நகர் மன்ற இயல்பு கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 41-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் பாண்டியன் பேசியபோது, ’புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இதில் திமுக அரசு, அதிமுக வார்டுகளை புறக்கணிப்பு செய்து திமுக வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் ஒரு சில திமுக வார்டுகளுக்கு மட்டும் ரூ.10 லட்சம் வரை நிதி ஒதுக்குகிறார்’என கூட்டத்தில் பேசினார்.

அப்பொழுது 28-வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினருக்கும் 41-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நகர்மன்ற இயல்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

இதனையடுத்து கூட்டத்தை புறக்கணிப்பு செய்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கூறுகையில், திமுக அரசு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அதிமுக வார்டுகளை புறக்கணிப்பு செய்வதாகவும் 42 வார்டுகளுக்கும் முறையாக நிதி வழங்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:பெண் சிசு கொலை முதல் சிலை கடத்தல் தடுப்பு வரை அதிரடி - ஓய்வுபெறும் டிஜிபி ஜெயந்த் முரளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.