ETV Bharat / state

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரியும் சகோதரரும் ஒரே நாளில் மரணம் - 2 members of the same family dead

பிரபல நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மற்றும் சகோதரர் ரெங்கநாதன் ஆகிய இருவரும் ஒரே நாளில் மரணமடைந்த சம்பவம் அவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனருமான போஸ் வெங்கட்டின் சகோதரியும் சகோதரரும் ஒரே நாளில் மரணம்

author img

By

Published : Jun 24, 2023, 8:46 PM IST

புதுக்கோட்டை: பிரபல நடிகரும், சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான போஸ் வெங்கட் சகோதரி வளர்மதி மற்றும் சகோதரர் ரெங்கநாதன் ஆகிய இருவரும் ஒரே நாளில் இறந்தது பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரியும் சகோதரரும் ஒரே நாளில் மரணம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் அருகில் உள்ள பாண்டிப்பத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், போஸ் வெங்கட். இவர் குடும்பம் பலவருடங்களாக அறந்தாங்கியில் வசித்து வந்தனர். தற்போது தொழில் அடிப்படையில் சென்னையில் வசித்து வந்த சகோதரி வளர்மதி நேற்று காலமானார்.

அவருடை இறப்பு செய்தி கேட்டு சகோதரர் ரெங்கநாதன் உடனே அறந்தாங்கியில் இருந்து சென்னை சென்று தன் சகோதரி வளர்மதியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணர்ந்த உறவினர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து உள்ளனர். அவர் மரணமடைந்துவிட்டார் என்று மருந்துவர் சொன்ன செய்தி உறவினர்களுக்கு அதிர்ச்சியாய் அமைந்தது.

இரண்டு வருடத்திற்கு முன்பு, இதய அறுவை சிகிச்சை செய்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த ரெங்கநாதன் தன் ஒரு சகோதரியின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். மற்றொரு சகோதரியான வளர்மதி மீது மிகவும் பாசத்துடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரியின் மரணம் இவர் மனதைப் பெரிதும் பாதித்த நிலையில், இவர் உயிரிழந்திருப்பது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து போஸ் வெங்கட் உட்பட உறவினர்கள் அனைவரும் சகோதரி வளர்மதியின் இறுதிச் சடங்கை முடித்துக்கொண்டு சகோதரர் ரெங்கநாதன் உடலை எடுத்துக்கொண்டு இரவு அறந்தாங்கி வந்து சேர்ந்தனர். அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் அறக்கட்டளை என்ற சமூக சேவை அமைப்பில், தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ரெங்கநாதன் பல பொது சேவைகளை இதுவரை செய்து வந்துள்ளார்.

அவருடைய பெரும் முயற்சியால் கொண்டுவரப்பட்ட அறந்தாங்கி ஜீவன் ஆலயம் எனும் மின்தகன மையத்தின் தேவைகளை உடனடியாக செய்து தரக்கூடியவர், ரெங்கநாதன். தற்போது அதே தகன மையத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது என்பது அறந்தாங்கியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மனைவி மற்றும் இரண்டு மகள் கொண்ட குடும்பப் பொருளாதார சூழலையும் மறந்து பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்த ரெங்கநாதன் இறப்பு போஸ் வெங்கட் குடும்பத்தினர் மட்டுமல்லாது அறந்தாங்கி மக்களுக்கும் பெரும் இழப்பாக உள்ளது.

இதையும் படிங்க: டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி கைது - பணியில் இருந்த காவலரை வசைபாடியதால் வந்த சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.