ETV Bharat / state

சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது

பெருங்காட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

perungadu
perungadu
author img

By

Published : Jun 9, 2021, 10:00 PM IST

புதுக்கோட்டை: கரோனா தொற்று இரண்டாவது அலையை முழுவதுமாக கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, அறந்தாங்கி அடுத்த பெருங்காடு தனியார் மண்டபத்தில் மஞ்சகரை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக, அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில பாட்டில்களை கைப்பற்றிய காவல் துறையினர், மஞ்சக்கரையைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.