ETV Bharat / state

சாதி அடிப்படையில் புறக்கணிப்பு: பள்ளி மேலாண்மைக் குழுவை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதியின் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவைக் கண்டித்து கண்ணீர் அஞ்சலி பதாகை ஏந்தி பெண் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஜாதி அடிப்படையில் புறக்கணிப்பு
ஜாதி அடிப்படையில் புறக்கணிப்பு
author img

By

Published : Jan 14, 2023, 4:21 PM IST

சாதி அடிப்படையில் புறக்கணிப்பு: பள்ளி மேலாண்மைக் குழுவை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியைச்சேர்ந்தவர், கிருஷ்ணகுமாரி. இவர் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கடந்த ஒரு வருடமாக தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

அழைப்பின் பேரில் இவர் கடந்த ஆண்டு 9/7/2022 அன்று பள்ளி மேலாண்மை மறுக்கட்டமைப்புக்கான கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதில் தன்னார்வலர் என்ற பிரிவில் தன்னை இணைக்க கூறியதாகவும், தன்னுடைய கோரிக்கையை ஏற்காமல் பள்ளி நிர்வாகம் வேண்டுமென்றே வேறு ஒருவரை உறுப்பினராக்கியதாகவும் கிருஷ்ணகுமாரி கூறினார்.

மேலும் அரசு விதிகளை பின்பற்றி தேர்தல் நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக உறுப்பினர்களை நியமித்து விதிக்கு புறம்பாக கூட்டம் நடைபெற்றதாகவும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்ததை ரத்து செய்யக்கோரியும் தலைமை ஆசிரியரிடம் கேட்டால் ஒருமையில் பேசுவதாகவும்; தான் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்றால் மற்ற பெற்றோர் கூட்டத்தில் பங்கேற்க வர மறுப்பதாகவும் தெரிவித்து தன்னைக் கூட்டத்தில் இருந்து சாதி ரீதியாக புறக்கணிப்பதாகப் பெற்றோர் மற்றும் தன்னார்வலரான கிருஷ்ணகுமாரி கூறினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவை கண்டித்து பள்ளியின் நுழைவு வாயில் அருகில் நின்று கண்ணீர் அஞ்சலி பதாகை ஏந்தி தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கிராமத்தை சிறைபிடித்த யானைக் கூட்டம்: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.