புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகாவுக்கு உள்பட்ட கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் செம்முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி கோயிலின் திடலில் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட காளைகளும் அதேபோன்று பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பங்குபெற்றனர்.
இந்த மஞ்சுவிரட்டில் திடலில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் தெற்கு திசை தெரியாமல் ஆங்காங்கே ஓட தொடங்கியது. இதனை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கினர்.
இதில் மாடு முட்டியதில் அசார் என்ற 27 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: மாபெரும் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்