புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே புதுநகர், புதுக்கோட்டை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை குரங்கு ஒன்று கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குரங்கின் மீது மோதியதில் குரங்கின் கால்களில் காயம் ஏற்பட்டு, குரங்கு சாலையைக் கடக்க முடியாமல் நிலை தடுமாறி அங்கும், இங்குமாக தாவிக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட தனியார் பள்ளி வாட்ச்மேன் அதை சாலையிலிருந்து மீட்டு, அதற்கு குடிதண்ணீர் வழங்கி, குரங்கு அடிபட்ட சம்பவத்தை வனத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் குரங்கை பத்திரமாக ஒப்படைத்தார். பின்னர் வனத்துறையினர் குரங்கிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து வனத்துறைக்கு எடுத்துச் சென்றனர்.
சாலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குரங்கிற்கு தண்ணீர் வழங்கி காப்பாற்றிய மனிதாபிமானமிக்க வாட்ச் மேனின் செயல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் குரங்குக்கு தண்ணீர் வழங்கிய நபருக்கு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் ஒரு சில நபர்கள் புகைப்படங்கள், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றனர்.
இதையும் படிங்க:மின் கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைப்பு - மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்