புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள அரங்குடிபட்டியைச் சேர்ந்தவர், வைர மூர்த்தி. இவர் அரங்குடிபட்டி பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு, சிறு வயதிலிருந்தே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என கனவு கண்டிருந்துள்ளது.
அப்போது இணையதளத்தின் மூலம் கிடைத்த ஒரு ஐடியாவை பிடித்துக்கொண்டு, தற்போது எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். ஒரு யூனிட் சார்ஜூக்கு 60 கி.மீ., பயணம் செய்யலாம் எனவும்; 50 கி.மீ., வேகத்தில் வாகனத்தை இயக்க முடியும் எனவும் கூறுகிறார்.
இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்தினால் பெட்ரோல் செலவு மிச்சமாகும் எனத் தெரிவித்துள்ளார். இவர் இந்த எலக்ட்ரிக் மோட்டாரை வைத்து விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகிறார். வைர மூர்த்திக்கு தமிழ்நாடு அரசு இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்; நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சிசிடிவி: இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு