புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவிற்கும் ரிஸ்வானா பேகமிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் கடந்த பிப்ரவரி மாதம் ரிஸ்வானா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர்களிடையே பலமுறை சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியுற்ற நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலுள்ள பைத்துல் மால் ஜமாத்தில் இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதில் கோபமடைந்த அப்துல்லா, சாலையில் வைத்து ரிஸ்வானாவிடம் முத்தலாக் கூறிவிட்டு சென்றுள்ளார். மேலும், அப்துல்லா விரைவில் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாகவும், குடும்ப தகராறிற்கு காரணமான கணவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிஸ்வானா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் ஷேக் அப்துல்லா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: 'கேரம் ஆட மறுத்த மனைவி: முத்தலாக் கொடுத்த கணவன்...!'