ETV Bharat / state

நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல்: ஓட்டுநர் தற்கொலை!

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கடனுக்கு வாங்கிய வாகனத்தைப் பறிமுதல்செய்து மீண்டும் பணம் கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

 A Driver Suicide Him self for finance Company therataning In Pudukottai

author img

By

Published : Sep 30, 2020, 5:36 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் 28. ஓட்டுநரான இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 2 சரக்கு ஆட்டோக்கள் வாங்கி ஓட்டியுள்ளார்.

போதிய வருமானம் கிடைக்காததால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த இரு வாகனங்களையும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல்செய்தனர்.

இந்நிலையில், வினோத்குமாரிடம் பறிமுதல்செய்த இரு வாகனங்களையும் தனியார் நிதி நிறுவன நிர்வாகம் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டனர்.

ஆனால் அதன்பிறகு கடன் தொகையைவிட குறைந்த தொகைக்கு வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாகக் கூறி மீதித் தொகையை செலுத்தக்கோரி கடந்த ஒரு வாரமாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வினோத் குமார் வீட்டிற்குச் சென்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

தற்போது கரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் இருந்ததால் தன்னால் தற்போது கடன் நிலுவைத் தொகையைக் கட்டுவதில் சிக்கல் உள்ளதாக கூறியதை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கேட்கவில்லை.

இதனால் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட வினோத்குமார் நேற்று முன்தினம் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக‌ புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.