புதுக்கோட்டை: இலுப்பூர் மதர் தெரசா வேளாண் கல்லூரியில் பல்வேறு வகையான பசு, காளை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வேளாண் கல்லூரியில் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது வேளாண் பொருட்களைக் காட்சிப் படுத்துவதோடு, புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்துச் செல்வர்.
மதர் தெரசா வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மாதத்திற்கு ஒரு முறை அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று மண் வகைகளை ஆய்வு செய்து எந்த செடியை வைத்தால் வளரும் என்று ஆலோசனை கூறி நன்கு வளரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு வைப்பார்கள்.
இந்நிலையில், வேளான் கல்லூரியில் வளர்க்கப்படும் எச்எப் என்ற நான்கு வயது நிரம்பிய பசுமாடு இரு கன்றுகளை ஈன்றுள்ளது. பசு பசுமாடு நள்ளிரவில் முதலில் காளைக் கன்று ஒன்றை ஈன்றது. தொடர்ந்து மீண்டும் ஒரு பசு கன்றை ஈன்றது. வழக்கமாகப் பசு மாடுகள் அனைத்தும் ஒரு பிரசவத்தில் ஒரே ஒரு கன்று தான் பெற்றெடுக்கும். ஆனால் இலுப்பூர் தனியார் வேளாண் கல்லூரியில் வளர்த்த பசுமாடு இரண்டு கன்று ஈன்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அரிய வகை பசுவைக் காண வந்த சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பசு மற்றும் கன்றுகள் முன்பு செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: இரட்டை இலை தோற்கும்.. விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்? - அதிமுக அரசியல் நிலவரம் என்ன?