ETV Bharat / state

வதந்திகளை நம்பாதீங்க... மென்சுரல் கப் குறித்து மருத்துவரின் விளக்கம்! - நாப்கினுக்கு பதில் மென்சுரல் கப்

மென்சுரல் கப்பில் சேகரிக்கப்படும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்றுவிடும் என்ற வதந்தியால், பெரும்பாலான பெண்கள் மென்சுரல் கப்பைப் பயன்படுத்த தயங்குகின்றனர். ஆனால், எதார்த்தம் அப்படியல்ல என்கிறார் மருத்துவர் சங்கீதா...

மென்சுரல் கப்
மென்சுரல் கப்
author img

By

Published : Jul 8, 2020, 12:49 PM IST

Updated : Jul 9, 2020, 3:32 PM IST

பூப்பெய்திய பெண்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ளது மாதவிடாய். கர்ப்பப்பை சுருங்கி விரிந்து வெளியேறும் மாதவிடாய் சில பெண்களுக்கு தாங்க இயலாத வலியை ஏற்படுத்தும். மாதவிடாய் காலங்களில் கசியும் ரத்தத்தைச் சுகாதாரமாக அப்புறப்படுத்த சில குக்கிராமங்களில் இன்னமும் காய்ந்த சருகுகள், இலை போன்றவற்றையே பயன்படுத்துவதாகத் தரவுகள் மூலம் அறியமுடிகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நகர்ப்புறங்களிலும், சில கிராமங்களிலும் நாப்கின் உபயோகம் மட்டும் ஒவ்வோரு ஆண்டும் அதிகரிக்கிறது.

ஆனால், நாப்கின் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். ஆம், அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் உகந்தது அல்ல என ஆமோதிக்கின்றனர் மருத்துவர்கள்.

பெண்களின் உடலில் காணப்படும் மற்ற இடங்களிலுள்ள தோல் போல பிறப்புறுப்புப் பகுதியில் இருக்காது. நுண்ணுணர்வு நரம்புகள் அதிகமுள்ள மென்மையான பகுதி இது. இந்த இடத்தில் ரசாயனங்கள் விரைவாக வினைபுரியும். தொடர்ந்து நாப்கின் பயன்படுத்துவதால், நுண்ணுணர்வுகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

நாப்கின்களின் தரம் குறித்து எவ்வித விரிவான ஆய்வும் மக்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை. இதனால்தான், தற்போது மருத்துவர்கள் மென்சுரல் கப்பை பரிந்துரைக்கின்றனர்.

நாப்கின்
நாப்கினின் ஆயுள்

மென்சுரல் கப் என்றால் என்ன?

சிலிக்கான், ரப்பர் லேடக்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் கூம்பு வடிவ கோப்பைதான், மென்சுரல் கப். இதை 300 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை வசதிக்கேற்ப வாங்கி சுகாதாரமாகப் பயன்படுத்தினால், 3 முதல் 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும். மாத பட்ஜெட்டில் நாப்கின்களுக்கு ஒதுக்கும் செலவைவிட இது குறைவுதான்.

1937ஆம் ஆண்டு இந்த மாதவிடாய் கோப்பைகள் அமெரிக்காவில் பயன்பாட்டுக்குவந்தன. இந்தியாவில் இந்த கப் குறித்த விழிப்புணர்வு தற்போதுதான் தொடங்கியுள்ளது என்கிறார், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் சங்கீதா. அவரிடம் ஈடிவி பாரத் சார்பில் மென்சுரல் கோப்பை குறித்து விரிவாகப் பேசினோம்.

நாப்கின்களுக்கு சரியான மாற்று மென்சுரல் கப் தானா?

”நிச்சயமாக, இதனைப் பரிந்துரைப்பேன். மென்சுரல் கப் நாப்கின்களை விட சுகாதாரமானது. சூடு நீரில் போட்டு சுத்தமாகக் கழுவி பயன்படுத்துவதால் அலர்ஜி போன்றவற்றையும்கூட தடுக்க முடியும். இதனால் பெண்களின் பெரிய பாரமான மாதவிடாய் வலி குறைகிறது. இந்தக் கோப்பையைப் பொருத்திக்கொண்டு நீச்சல், விளையாட்டுப் போட்டிகள் என அனைத்துமே செய்ய முடியும். முழுக்க முழுக்க வசதியானது. இது சிலிகானில் செய்யப்பட்டுள்ளதால் பயன்படுத்தும்போது எரிச்சல் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால் சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. இதைப் பயன்படுத்த நினைப்பவர்கள் எதற்கும் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது” என அலர்ட் செய்கிறார் மருத்துவர் சங்கீதா.

’மென்சுரல் கப்’ எல்லா பெண்களும் பயன்படுத்தலாமா?

திருமணமான பெண்களுக்கு இது உகந்ததாக இருக்கும். இளம்பெண்களும் பயன்படுத்தலாம், ஆனால் அவர்களுக்குத் திருமணமானவர்களைப் போன்று பிறப்புறுப்பில் தளர்வுகள் இருக்காது என்பதால் அசௌகரியமாக இருக்கும். ஆனால், சில முறை பயன்படுத்திவிட்டால் பழகிவிடும். பிரசவித்த பெண்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

திருமணமாகாத பெண்கள் 'S' என்ற அளவில் வாங்கினால் வசதியாகயிருக்கும், மற்ற பெண்கள் முதலில் 'M' என்ற அளவை வாங்கி முயற்சி செய்யலாம். ரொம்ப இறுக்கமாகவோ, தளர்வாகவோ உணர்கிறீர்கள் எனில் அளவில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்தக் கப்பைப் பெரும்பாலானோர் ஆதரித்தபோதும், இன்னும் பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, இதைத் தெரிந்துகொண்ட பெண்கள்கூட, கருப்பை விரிந்து விடும் இதனால் அதிக வலி ஏற்படும், பக்க விளைவுகள் உருவாகும் என நம்பி மென்சுரல் கப்பைத் தவிர்க்கின்றனர். ஆனால், புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிதா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் கவிதா, “2018ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது நிவாரணப் பொருள்களுடன் அம்மாநில அரசு பெண்களுக்கு இந்த மாதவிடாய் கோப்பைகளையும் வழங்கியது. அந்தச் செய்தி மூலமாகத்தான் இந்த கப் குறித்து எனக்குத் தெரிந்தது. பின்னர், ஆன்லைனில் ஆர்டர் செய்து இதனைப் பயன்படுத்தி பார்க்கும் ஆவல் வந்தது. தயங்காமல் வாங்கிப் பயன்படுத்திவிட்டேன். எவ்வித எரிச்சலும் இல்லை. இதனால் நாப்கின்களின் செலவு முற்றிலும் குறைந்தது.

மென்சுரல் கப் பயன்படுத்தலாமா?

இந்த மென்சுரல் கப் 4 முதல் 12 மணிநேரத்திற்கு ரத்தப்போக்கு வெளியேறாமல் வைத்துக்கொள்ள உதவுகிறது. ஐந்து நாள்கள் பயன்படுத்திவிட்டு, கொதிக்கும் நீரிலிட்டு சுத்தப்படுத்துகிறேன். உலர்ந்த பின் பாதுகாப்பான இடத்தில் வைப்பேன். ஒவ்வொரு மாதமும் சுத்தம் செய்வது அவசியம்” என்றார்.

மென்சுரல் கப்பின் நன்மைகள்

நாப்கின் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் அலர்ஜி, ரேஷஸ் போன்ற பிரச்னைகள் மென்சுரல் கப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படாது. முற்றிலும் சௌகரியமானது. மாதவிடாயின்போது தாம்பத்யம் மேற்கொள்ள பயன்படுத்தும் வகையிலும் கப்புகள் கிடைக்கின்றன. இது கருத்தடை சாதனம் கிடையாது. பெண்கள் கருப்பை விரிவடைந்துவிடும் என அஞ்சத் தேவையில்லை, இது பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்பட்டது அல்ல.

பெண்களின் உடல்நலம் மட்டுமில்லாமல் நாட்டின் நலமும் அவசியமான ஒன்றுதான். நாப்கின்களால் மண்ணை அடைப்பதை நிறுத்திவிட்டு, மென்சுரல் கப்பை மக்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் முதலில் இதுகுறித்து அரசு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இலவசமாக கிராமம், நகரம் என அனைத்துத் தரப்பினரிடையேயும் மென்சுரல் கப்பைக் கொண்டுசேர்க்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையும்கூட.

இதையும் படிங்க: இவர்கள் சிங்கப் பெண்களல்ல... பருத்திப் பெண்கள்...!

Last Updated : Jul 9, 2020, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.