புதுக்கோட்டை: குடுமியான்மலையில் வேளாண்மை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று (ஜன.12) கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்பட்டது. இதனை, கல்லூரி முனைவர் நக்கீரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
அந்த போட்டிகள் அனைத்தும் 90’s Kids விளையாட்டாகவே அமைக்கப்பட்டது. கோலி குண்டு, தண்ணீர் நிரப்புதல், சாக்குப் போட்டி, ஸ்பூன் வித் லெமன் உள்ளிட்டப் பல்வேறு விளையாட்டுகளை நடத்தினர். இதில், மகிழ்ச்சியாக அனைவரும் கலந்துகொண்டு விளையாடினர். மேலும், கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கும்மியடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரிகளைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று காளை மாடுகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் என அனைவரையும் அழைத்து வந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இங்கு, நடந்த போட்டிகள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Pongal holidays: மெட்ரோ ரயிலின் சேவை நேரம் நீட்டிப்பு!