ETV Bharat / state

புதுக்கோட்டையில் களைக்கட்டிய 'ஈபிஎஸ்' ரேக்ளா ரேஸ்! - Pudukkottai News

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டை மச்சுவாடியில் அதிமுக ஈபிஎஸ் அணியினர் நடத்திய மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடந்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 4, 2023, 8:35 PM IST

புதுக்கோட்டையில் களைக்கட்டிய ரேக்ளா ரேஸ்!

புதுக்கோட்டை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடியில் அம்மாவட்ட அதிமுக ஈபிஎஸ் அணியினர் சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் இன்று (பிப்.4) நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டு வண்டி பந்தயத்தை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். அதிமுக ஈபிஎஸ் அணி சார்பில் நடத்திய இந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மச்சுவாடியில் இருந்து இச்சடி வரை தூரத்தை இலக்காகக் கொண்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் நின்று பார்த்து ரசித்தனர். இதில் பெரிய மாடு, சிறிய மாடு, பெரிய குதிரை, சிறிய குதிரை, புது குதிரை என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

பெரிய மாடு பிரிவில் முதல் பரிசாக 40 ஆயிரத்து 111 ரூபாயும், சிறிய மாடு முதல் பரிசாக 25 ஆயிரத்து 111 ரூபாயும், பெரிய குதிரைக்கு முதல் பரிசாக 20 ஆயிரத்து 111 ரூபாயும், சிறிய குதிரைக்கு முதல் பரிசாக 15 ஆயிரத்து 111 ரூபாயும், புது குதிரைக்கு முதல் பரிசாக 10,111 ரூபாயும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: வெங்காயம் விற்பனையில் முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4.50 லட்சம் மோசடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.