ETV Bharat / state

காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி - தமிழ்நாடு அரசு

புதுக்கோட்டை: காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

minister
minister
author img

By

Published : Nov 17, 2020, 8:22 PM IST

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து புதுக்கோட்டை வரை செயல்படுத்த 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்துவதற்கு 700 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

வாய்க்கால்கள் வெட்டுவதற்கு 331 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதலமைச்சர் பழனிசாமி இத்திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடுக்கு குறைவாக உள்ளது.

எண்ணிக்கை குறைந்தாலும் தினமும் 70ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இறப்பு விழுக்காடு கடுமையாக குறைந்துள்ளது. இதற்கு முழு காரணம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தான்.

தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 5 லட்சம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாளை (நவ.18) திட்டமிட்டபடி மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது" என்றார்.

இதையும் படிங்க: தொடர் தோல்வியில் காங்கிரஸ்: தலைமைக்கு எதிராக பொங்கும் மூத்தத் தலைவர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.