ETV Bharat / state

Latest Pudukkottai News: 2,100 போதை மாத்திரைகள் பறிமுதல் - விற்பனை செய்த 6 பேர் கைது!

author img

By

Published : Oct 6, 2019, 7:55 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Aranthangi

Latest Pudukkottai News: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நடந்துகொண்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கையில் ஊசி செலுத்தியத்திற்கான அடையாளம் இருந்துள்ளது.

அதுபற்றி காவல்துறையினர் கேட்டபோது, அவர் போதை ஊசி பயன்படுத்தியுள்ளதும், போதை மாத்திரைகள் வாங்கி வந்ததும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர், அவரிடமிருந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தை அறிந்தனர். பின்னர் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், போதைப் பொருட்கள் விற்பனைச் செய்யும்போதே ஜெகன், ரியாஸ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

போதை மாத்திரைகள் விற்பனை செய்துவந்த 6 பேர் கைது

விசாரணையில், அவர்களுடன் சேர்ந்து வாசு, வினோத், கௌதம்ராஜா, பானுமதி ஆகிய நான்கு பேரும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரத்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:

சிதம்பரத்தில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா!

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அறந்தாங்கி அருகே அரசர்குலம் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்திற்க்கிடமான நபரை பிடித்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்த நபரின் கையில் ஊசி போடும் தழும்பு இருந்ததையடுத்து அது குறித்து காவல்த்துறையினர் கேட்டபொழுது, தான் போதை ஊசி பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தை அறிந்து கொண்ட காவல்த்துறையினர் அங்கு மாறு வேடத்தில் சென்று தங்களுக்கும் போதை மாத்திரை வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது காவல்த்துறையினரிடமே போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக பிடிபட்ட ஜெகன், ரியாஸ் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் என்று தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி கோகிலா தலைமையில் தனிப்படை அமைந்து காவல்த்துறையினர் தீவிரமாகத்தேடி வாசு, வினோத், கௌதம்ராஜா, பானுமதி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 2100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 6 குற்றவாளிகளும் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்பு சிறையிலடைக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.