புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள குலமங்களத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 10 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டை, பொன்னமராவதி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், பனையப்பட்டி, விராச்சிலை, அறந்தாங்கி, சிங்கம்புணாம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 604 காளைகள் கொண்டுவரப்பட்டன. அவற்றைப் பிடிக்க 130 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே மருத்துவக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து போட்டியின் போது, பார்வையாளர் புத்தாம்பூரைச் சேர்ந்த ரெங்கையா (65) என்ற முதியவரை காளை முட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதேபோல் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 31 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ குழுக்கள் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, அதில் சிலரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்நிகழ்வில் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, பொன்னமராவதி துணைக்காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தைப்பூச திருவிழா: களைகட்டிய ஜல்லிக்கட்டு