ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் போக்சோவில் கைது - Youth arrested in Pokmon

புதுக்கோட்டை: 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞரை காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தீனதயாளன்
தீனதயாளன்
author img

By

Published : Mar 7, 2021, 2:43 PM IST

திருவரங்குளம் அருகே இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சேங்கைத்தோப்பை சேர்ந்த தீனதயாளன் (20) என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி சிறுமியை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் தீனதயாளன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருமயம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.