நாளை நாட்டின் 2ஆவது குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவிக்கிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யபட்டவர்கள் புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.அமுதா, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கி.சிவகுமார், திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.மா.அரங்கசாமி, கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சிறப்பு ஆசிரியர் ஆ.வேதமுத்து, கோட்டை-1 காமராஜ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.விஜயேந்திரன், ஊனையூர் பிச்சையப்பா, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தா.சீனிவாசன், குருவிக்கொண்டான்பட்டி ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.மீனாட்சி, சவேரியாபுரம் புனித சவேரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரோசாலி, ஆலங்குடி புனித அற்புதமாதா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.அருளாந்து, இலுப்பூர் ஆர்.சி.துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஞா.ஜாக்குலின் யோலா, இராஜகோபாலபுரம் வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கோ.தவமணி போன்றோர் ஆவர்.