தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மாவடுகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடியான அழகிரி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனிடையே, கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று சேலம் மாவட்டம், கோனேரி பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் அறிவழகன் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், அறிவழகனை கொலை செய்ததாக அழகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி மலர்விழி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அழகிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
இதையும் படிங்க: பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்வு - 12ஆண்டுகள் சிறை தண்ட
னை