பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் சார்பாக விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தின மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்த, மாரத்தானில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இந்த மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. இதில் 5 கி.மீ, 7 கி.மீ, 3. கி.மீ என மூன்று பிரிவுகளாகப் போட்டி நடைபெற்றது.
மேலும், போட்டி தொடங்குவதற்கு முன்பு விவேகானந்தர் திருவுருப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தாளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அபய வரதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கோ பூஜை விழா