ETV Bharat / state

என் மனைவியை மீட்டுத் தாருங்கள் - இளைஞர் தீக்குளிக்க முயற்சி - tamil latest news

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காதல் மனைவியை மீட்டுத் தரக் கோரி இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இளைஞர் தீக்குளிக்க முயற்சி
இளைஞர் தீக்குளிக்க முயற்சி
author img

By

Published : May 10, 2020, 12:26 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சிறுகன்பூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னையிலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அருகில் உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா என்ற பெண்.

மணிகண்டனும் பிரசன்னாவும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இளைஞர் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில் பிரசன்னா கர்ப்பமாக இருப்பதால், அவரது பெற்றோர் பிரசன்னாவை அழைத்து சென்றதாகவும், தன் காதல் மனைவியை அவர்கள் மறைத்து வைத்துள்ளதாகவும், மனைவியை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணிகண்டன் தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். ஊரடங்கு அமலில் உள்ள பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'ரயில் மோதி தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.