ETV Bharat / state

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை! - Young man convicted of sexual assault, sentenced to 10 years in prison

பெரம்பலூர்: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரம்பலூர்
பெரம்பலூர்
author img

By

Published : Dec 17, 2020, 7:50 AM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பால்ராஜ், 2016 செப்டம்பர் 09இல் அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய பெண்ணை காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் குன்னம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பால்ராஜ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்குள்படுத்தப்பட்டார். இதனையடுத்து பிணையில் பால்ராஜ் வெளியே வந்தார். இவ்வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையின் நேற்று (டிசம்பர் 16), இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, குற்றவாளியான பால்ராஜுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.