ETV Bharat / state

பெண் எஸ்.பி பாலியல் புகார்! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி! - பாலியல் புகார்

பெரம்பலூர்: ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் குறித்து பெரம்பலூரில் சிபிசிஐடி இன்று விசாரணையை தொடங்கியது.

cbcid
cbcid
author img

By

Published : Mar 2, 2021, 4:02 PM IST

சிறப்பு காவல்துறை டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் மீது, பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணையை நேரடியாக கண்காணிப்போம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சிபிசிஐடி தனது விசாரணையை இன்று தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விசாரணை அதிகாரி முத்தரசி தலைமையில், விசாரணை நடத்தப்படுகிறது. 3 பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, தொடர்புடைய பெண் அதிகாரியிடமும் நேரடியாக வாக்குமூலம் பெற்றதாகத் தெரிகிறது. தொடர்ந்து மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் விசாரணைக்குழு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்தக்கட்ட விசாரணை நடக்கும் எனக் கூறப்படுகிறது.

பெண் எஸ்.பி பாலியல் புகார்! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

இதையும் படிங்க: கோடையை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய காவல் உயர் அலுவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.