ETV Bharat / state

டிராக்டர் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சிறுவன் - விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - Woman Dies in Road Accident in Perambalur family stagest protest demanding legal action

டிராக்டர் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய 15 வயது சிறுவனை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவ்விபத்தில் உயிரழந்த பெண்ணின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டிராக்டர் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சிறுவன்

author img

By

Published : Jan 11, 2021, 5:20 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெய் குப்பை காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலை. இவரது கணவர் செல்வராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், தனது 11 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கூலித் தொழிலாளியான அஞ்சலை வேலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் (ஜன.09) புதூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மோதி அருகில் உள்ள குட்டையில் விழுந்தார். அதேசமயம் டிராக்டரும் அவர் மீது விழுந்ததில், அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய 15 வயது சிறுவனை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியறுத்தியும், அஞ்சலையின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து அம்மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைகளில் என்.பி.எச்.எச். முறையை ரத்து செய்யக் கோரி குமரியில் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.