பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சபின் தாஜ். இவர் அருகிலுள்ள கிராமமான பெண்ண கோணத்தைச் சேர்ந்த ராமசாமி, செல்வகுமார் ஆகியோரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கித் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
அதன்படி, பெண்ண கோணத்தைச் சேர்ந்த சாந்தப்பன் என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும் சாந்தப்பன் இடம், வீட்டை கிரையம் செய்து கொடுத்தால் மட்டுமே பணம் பெற முடியும் என்பதால் 2008ஆம் ஆண்டு தனது வீட்டை கிரைய பத்திரம் மூலம் எழுதிக் கொடுத்து 10 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வட்டியும் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபின் தாஜ் தாயார் இறந்துவிடவே வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் இருந்தார்.
இந்நிலையில் கடன் கொடுத்த சாந்தப்பன் சபின் தாஜை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் மேலும் தன்னுடைய வீட்டை அபகரித்து உள்ளதாகவும் வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
வீட்டை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பெண் தற்கொலை முயற்சி - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பெரம்பலூர்: வீட்டை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.