ETV Bharat / state

சத்துணவு அமைப்பாளர் பணி; தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட் ஆட்சியர் - பெரம்பலூர்

பெரம்பலூர்: பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Sep 23, 2020, 7:26 AM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 40 சத்துணவு அமைப்பாளர்கள், 42 சமையலர்கள், 60 சமையல் உதவியாளர்களுக்கான பணி காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிப்பதற்கு தகுதியான பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகலுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24.9.2020 முதல் 30.9.2020வரை மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ சேர்ப்பிக்க வேண்டும்.

காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புகளுக்கும் இடையே தூரம் மூன்று கிலோ மீட்டர் இருக்கவேண்டும். சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் பழங்குடியினர் எட்டாம் வகுப்புவரை படித்து தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

1.9 .2020 அன்று பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகுதி உடைய பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வி தகுதி சான்று, மதிப்பெண் சான்று இருப்பிட சான்று, சாதி சான்று, வருமானச் சான்று விதவை மற்றும் ஆதரவற்றோர் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவராக இருப்பின் உரிய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்று மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்று போன்றவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வில் அசல் சான்றுகளை காண்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.