பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய மாநில அமைப்புச் செயலாளர் மனோகரன், கிராமப்புறங்களில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகக் குரல் கொடுப்பவர், பொதுமக்களுடன் நன்கு பழகக் கூடியவராக இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறமுடியும் எனவும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியோ சின்னமோ முக்கியமில்லை ஆகவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தலில் உதயநிதி...!